COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் காரணமாக IPL 13வது சீசன் காலவரையன்றி ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் IPL 2020 நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் IPL அணி வீரர்கள் துபாய் சென்றடைந்தனர்.

வீரர்கள் அனைவரும் BIO-BUBBLE-ல் வைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாயில் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் இந்திய அணி பந்துவீச்சாளர் உட்பட அணியின் மேனஜ்மென்ட் ஊழியர்கள் 11 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனிமைபடுத்தபட்டுள்ளது. தோனி ரெய்னா உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி பாதிக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது..

அந்த இந்திய அணி பந்துவீச்சாளர் யார் என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

by ஜேஷ்..

Share this article on