கொரோனா பல சரிவுகளை மனிதர்களுக்கு கொடுத்திருக்கிறது. சகஜம் பழகி நாளாகிவிட்டது . பல புதிய முன்னெடுப்புகள் நடக்கிறது. Office சென்று வேலை செய்தவர்கள் இன்று Work from dood-களாக மாறிவிட்டனர். நகர சாலைகளில் நெரிசல் குறைந்திருக்கிறது. சக மனிதன் alien போல் ஆகிவிட்டான். Crowd இல்லாமல் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சினிமாக்கள் OTT தளங்களுக்கு சென்றுவிட்டது. இப்படி பல மாற்றங்கள்.

கேளிக்கை இல்லாத சமயங்களில் youtube போன்றதொரு தளம் தான் பொழுதுபோக்கு. அப்படி பொழுது போகாமல் youtube-ல் scroll செய்து கொண்டிருந்தபோது கண்ணில்பட்டது Crew 21 youtube சேனலில் இருந்து BACKYARD BISTRO தமிழ் மினி சீரீஸ்.

போனா போது போர் அடிக்குதுன்னு பாக்க ஆரம்பிச்சு எல்லா எபிசொட்களையும் பாத்து முடிச்சாச்சு. ஒரு நல்ல குறும்படம் பாத்த திருப்தி எல்லா எபிசொட் முடிவிலும் கிடைக்குது. அடுத்து என்ன என்கிற ஆர்வத்தை விட அந்த திருப்தி தான் ரொம்ப புடிச்சிருக்கு. நல்ல இயக்கம் நல்ல ஒளிபதிவு நல்ல நடிப்புன்னு வழக்கமான விமர்சனம் இந்த சீரீஸ்க்கு பொருந்தாது. அதுக்காக உலக தரத்தில் ஒரு படைப்பான்னு கேட்டா அதுவும் இல்லை. ஆனா அதை மீறி இதை பத்தி பேச வைக்குறதுக்கு காரணம் மனித இயல்புகளை அது கடத்தி இருக்கும் விதம் தான்.

ஒரு உணவகம் உள்ள நடக்குற ஆறு பேரோட உரையாடல் தான் மொத்த கதையும் ஆனா அந்த கதை நகர்கிற விதம் எதிர்மாறான கதாபாத்திரங்கள்னு எல்லாமே அவ்ளோ அழகா இருக்கு. ஒரு படைப்போட மிக பெரிய வெற்றி அந்த படைப்பு அல்லது அந்த படைப்பில் இருக்கும் கதாபாத்திரம் நம்ம வாழ்க்கையோட பிரதிபலிப்பா இருக்கனும். அப்படி பிரதிபலிசிட்டா அது கண்டிப்பா வெற்றி அடையும். அப்படி இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் கண்டிப்பா எல்லாராலும் ஒப்பிட்டு பாத்துக்க முடியும் அது தான் இந்த சீரீஸ்-ன் வெற்றி. அதிலும் இளம்பிறையாக வரும் கதாபாத்திரம் வெறித்தனம். தாரிக் கதாபாத்திரம் நாம் அன்றாடம் பார்க்கும் மார்க்கெட்டிங் ஆள். ஸ்வேதா – சேயோன் இப்படி இருவரை நிச்சயம் கடந்தே தீருவோம். பிரேமினி – கிருபா நமக்கு நாமே கேட்டு கொள்ள வேண்டிய கேள்விகள்.

இந்த இளம்பிறை மனுஷனே இல்ல அப்படி ஒரு நடிப்பு, வாழ்த்துக்கள் எபினேசர். தாரிக்காக வரும் ஜார்ஜ் விஜய் சிறப்பு. டோனி, சிந்தூரி, கௌரிஷங்கர், கபிதா, லோகன் என்று எல்லாரும் அவர்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். குறை இல்லாத நடிப்பு.  அதிலும் கபிதா அவ்வளவு அழகு. சிந்தூரி ஏமாற்றப்பட்ட வலியோடு நிற்கும் modern மங்கை. டோனி தவறுக்காக வருந்தி நிற்கும் handsome குற்றவாளி. கௌரிஷங்கர் அழகு பெண்ணின் மனம் கவர்ந்த கள்வன்.

ஒவ்வொரு ஒளிபதிவாளனுக்கும் கேமரா மூன்றாவது கண் என்பார்கள். அந்த  மூன்றாவது கண் வழியே பார்க்கும் எல்லாமும் அழகாக தெரிய அழகியல் தெரிந்திருக்க வேண்டும். இங்கே ஒளிப்பதிவாளர் சுரேஷ் ஜோ யாவையும் அத்தனை அழகியலோடு மூன்றாவது கண்ணில் படம் பிடித்திருக்கிறார்.   

திரைக்கு கதை எவ்வளவு முக்கியமோ அதை விட திரைகதை முக்கியம். இங்கு திரைகதை தான் மிக பெரிய பலம். ஒரு சிறிய உணவகம் அதில் நடக்கும் உரையாடல் தான் கதை என்ற போதும் சலிப்பு தட்டாமல் அதை நகர்த்த திரைகதை நுணுக்கம் அவசியம் தெரிந்திருக்க வேண்டும. இயக்குனர் செல்வேந்திரன் அதில் மாஸ்டர்ஸ் முடித்திருப்பார் என்றே தோன்றுகிறது.

இசை, எடிட்டிங் என்று எல்லாம் அவ்வளவு தரம்.

மொத்தத்தில் Backyard Bistro உணர்வுகளின் தொகுப்பு.

நேரம் உள்ளவர்கள் பார்க்க கிழே கொடுக்கும் லிங்க்கை சொடுக்கலாம்.

by ஜேஷ்..

Share this article on