சினிமா நிறைய கலைஞர்களை கொண்டாடி இருக்கிறது. திறமைகளை அடையாளம் கண்டிருக்கிறது. செல்வமும் புகழும் வாரி கொடுத்திருக்கிறது. ஆனால் அதே சினிமா நிறைய கலைஞர்களை உதாசீனபடுத்தி தள்ளி இருக்கிறது. திறமை இருந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கிறது.செல்வம் புகழ் இரண்டிலும் கஞ்சத்தனம் காட்டியிருக்கிறது. அப்படி திறமை இருந்தும் பெரியதாய் கொண்டாடப்படாத, கொண்டாடப்படவேண்டிய ஒரு கலைஞன், நடிகர், சமுக சேவகர் என பன்முகம் கொண்ட நடிகர் ஜார்ஜ் விஜய் உடன் சமீபத்தில் Backyard Bistro மினி சீரீஸ் பற்றியும் அவரின் சினிமா அனுபவம் பற்றியும் ஒரு சிறிய உரையாடல்.

Hulk மாதிரி வேஷம் போட்டதுல இருந்து இப்போ backyard bistro வரைக்குமான நடிப்பு அனுபவம் பற்றி?

Hulk நடந்து ரொம்ப வருஷம் ஆகுது ஆனா இப்போ தான் நடந்த மாதிரி இருக்கு.அது இது எது நிகழ்ச்சி மூலமா ஆரம்பிச்ச பயணம் இப்போ backyard bistro வரைக்கும் கடவுள் அருளால போய்கிட்டு இருக்கு. ரொம்ப நல்ல பயணம். நிறைய ஏற்ற தாழ்வுகள். ஆனாலும் நிக்காம ஓடிகிட்டு இருக்கேன். அது தான் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன்.

Actor George Vijay

Backyard Bistro பற்றியும் அதுக்குள்ள நீங்க வந்தத பற்றியும்?

Backyard Bistro மினி வெப் சீரீஸ் ரொம்ப நல்லா வந்துருக்கு, மக்கள் கிட்ட இருந்தும் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. நிறைய பாசிடிவ் கமெண்ட்ஸ். இந்த சீரீஸ் இயக்குனர் செல்வேந்திரன் கூட நான் ஏற்கனவே கருப்பன்காட்டு வலசு அப்டிங்கிற படத்துல வொர்க் பண்ணிருக்கேன். அப்போதுல இருந்தே எனக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்துது. ஒரு நாள் கால் பண்ணி பிரதர் ஒரு மினி சீரீஸ் பண்ணலாம்னு இருக்கோம் அதுல ஒரு கேரக்டர் நீங்க தான் பண்ணனும் உங்கள மனசுல வச்சி தான் எழுதி இருக்கேன் அப்படின்னு சொன்னாரு அவ்ளோ தான் நானும் உடனே ஒகே சொல்லிட்டன். காரணம் செல்வா வொர்க் மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. கூடிய சீக்கிரத்துல ரொம்ப பெரிய இடத்துக்கு போக போறாரு.

With debutante Kabita of Backyard Bistro series

CREW 21 கூட இது இரண்டாவது ப்ராஜெக்ட் அத பத்தி சொல்லுங்க?

Crew 21 எனக்கு எபினேசர் பிரதர் மூலமா தான் அறிமுகம். கருப்பன்காட்டு வலசு அப்படின்னு ஒரு படம் பண்றோம் அதுல ஒரு முக்கியமான கேரக்டர் இருக்கு நீங்க பண்ணா நல்லா இருக்கும்னு சொல்லி செல்வா பிரதர் கூட இன்ட்ரோ குடுத்தாரு. அப்புறம் ஷூட்டிங் போனோம். ஷூட்டிங்ல எல்லாரும் ஒரு family மாதிரி இருந்தாங்க அது தான் crew 21ல எனக்கு ரொம்ப புடிச்ச விஷயம். அப்போதுல இருந்து நானும் crew 21 familyல ஒரு ஆள் ஆயிட்டேன்.

With Crew 21 – Backyard Bistro team

தாரிக் கேரக்டர் எவ்ளோ க்ளோஸ் உங்களுக்கு?

தாரிக் கேரக்டர் உண்மைய சொல்லனும்னா ஆரம்பத்துல எனக்கு அவ்ளோ க்ளோஸ்லா இல்ல செல்வா பிரதர் கேட்டதுக்காக பண்ணேன் ஆனா எபிசோட் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறம் எனக்கு கிடைக்கிற ரெஸ்பான்ஸ் நான் எதிர் பார்க்காதது.

As Tariq in Backyard Bistro series

அடுத்து வளர்ந்து வர உதவி இயக்குனர்களுக்கு  நிறைய விஷயங்கள் பண்ணி குடுக்குறிங்க அதை பத்தி?

நான் பெருசா எதுவும் பண்றதில்லை உதவி இயக்குனர்கள் எப்பவும் பாராட்ட படவேண்டியவர்கள். அவங்க எடுக்குற ஷார்ட் பிலிம்-ல ஏதாவது ரோல் இருக்கு அப்படின்னு கேட்டா மறுக்காம பண்ணி குடுக்குறேன். என்னால முடிஞ்ச அளவுக்கு உதவி இயக்குனர் தம்பிகளோட படைப்புகளை சமூக வலை தளங்களில் ஷேர் பண்றேன். சின்ன சின்ன promotions இதன் மூலமா அவங்களுக்கு கிடைக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோசம். அவ்ளோ தான்.

கடைசியா உங்களோட Social Service பத்தி?

Social Service.. கடவுள் கிருபைல என்னால முடிஞ்ச அளவுக்கு பண்ணிக்கிட்டு இருக்கேன். எண்ணூர்-ல இருக்க குமரன் ஸ்பெஷல் ஹோம்ல இருக்குற 40 ஆதரவற்ற குழந்தைகளை பாத்துகிட்டு இருக்கேன், அது போக இன்னும் வெளியே நமக்கு தெரிஞ்சு நிறைய கஷ்டபடுற பெற்றோர்களோட குழந்தைகள் 20பேருக்கு என்னால முடிஞ்ச உதவிகளை பண்ணிக்கிட்டு இருக்கேன். Events மூலமா Fundraise பண்ணி ஹெல்ப் பண்ணிக்கிட்டு இருக்கேன். இதுக்கு பின்னாடி இன்னும் நிறைய நல்ல உள்ளங்கள் இருக்காங்க. அப்புறம் இவ்ளோ நேரம் என் பதில் எல்லாத்தையும் பொறுமையா கேட்டதுக்கு ரொம்ப நன்றி.

One of the social service events
by ஜேஷ்..
Share this article on