வாரத்துக்கு ஏழு நாள் தான் ஆனா இந்த மொபைல் கம்பெனிலாம் வாரத்துக்கு எட்டு மொபைல் ரிலீஸ் பண்றாங்க. அப்படி பேர மட்டும் மாத்தி கம்மி பட்ஜெட்ல ரிலீஸ் ஆன மொபைல் தான் MI நிறுவனத்தோட   ரெட்மி 9A.

தேசத்தின் ஸ்மார்ட்போன் அப்படிங்கற டேக் லைன்ல ரிலீஸ் ஆன இந்த மொபைல் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன் வாங்க நினைக்குறவங்களுக்கான சாய்ஸ். இந்தியாவில் ரெட்மி மொபைல் மக்களிடம் மிகவும் பிரபலம். A சீரீஸ் வரிசையில் ரெட்மி 9A தற்போது வெளிவந்துள்ளது. அதன் சிறப்பம்சங்களை இனி  பார்ப்போம்.

Design

Design பொறுத்தவரையில் எந்தவிதமான வித்தியாசங்களும் இல்லை வழக்கமான dew drop டிசைனில் 6.55 இன்ச் HD+ டிஸ்ப்ளே கொடுக்கபட்டிருக்கிறது. இடது புறம் Volume Rockers மற்றும் power Button உள்ளது. கீழே micro Usb சார்ஜிங் போர்ட்டும் மேலே 3.5mm ஹெட்போன் ஜாக்கும் இருக்கிறது. பின்புறம்  கேமராவுடன் ரெட்மி லோகோ இருக்கிறது. Fingerprint sensor இந்த மொபைலில் இல்லை. அதற்க்கு பதிலாக face unlock உள்ளது. Sea blue, Nature green, Midnight black என்ற 3 வண்ண விருப்பங்களில் வருகிறது.

Camera

கேமராவை பொறுத்தவரை பின்புறம்  13 மெகாபிக்செல் லென்சும் முன்புறம் 5 மெகாபிக்செல் லென்சும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Performance

2gb ram variant-ல் வரும் ரெட்மி 9A helio G-25 என்கிற பேசிக் processor கொண்டு இயங்குகிறது. குறைந்த விலை ஸ்மார்ட்போன் என்பதால் இதற்க்கு மேல் எதிர்பார்க்க முடியாது. இந்த மொபைலின் முக்கியமான சிறப்பம்சம் இதனுள் 5000mah பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒருமுறை சார்ஜ் செய்தால் தொடர்ச்சியாக 162 மணிநேரம் பாடல் கேட்க முடியும் என்றும்  31மணிநேரம் 4g நெட்வொர்க் கொண்டு கால் பேச முடியும் என்றும், 25.5 மணிநேரம் வீடியோ பார்க்க முடியும் என்றும்,  11 மணிநேரம் கேம் விளையாட முடியும் என்றும் ரெட்மி தரப்பு கூறுகிறது. எனினும் ரியல் டைம் ரிசல்ட் சிறிது குறைவாகவே இருக்கும்.

TUV certified ரீடிங் மோடு உள்ளதால் இரவில் மொபைல் பயன்படுத்தினாலும் கண்களுக்கு உறுத்தல் இருக்காது. மேலும் P2i nano coating உள்ளதால்  தவறி தண்ணிரில் விழுந்தாலும் மொபைல் எதுவும் ஆகாதபடி வடிவமைத்துள்ளனர். (முக்கிய குறிப்பாக இது Water Proof மொபைல் அல்ல) செப்டம்பர் 4, மதியம் 12மணியிலிருந்து நேரடி விற்ப்பனைக்கு வரும் ரெட்மி 9A ரூ.6799 என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

by ஜேஷ்..
Share this article on