ஏப்ரல் 14 1950, கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது. அப்போது யாருக்கும் தெரியவில்லை அந்த குழந்தை ஒரு மிக பெரிய ஆளுமையாக மாறும் என்று. திரு. வசந்த குமார்  சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்து இன்று தமிழ்நாட்டின் மிக முக்கியமான தொழிலதிபர், பாராளுமன்ற உறுப்பினர் வரைக்கும் வளர்ந்து நிற்கிறார்.

சிறு வயது முதலே ஏழ்மையை சுற்றியே வாழ்ந்தாலும் தன்னம்பிக்கை மட்டும் எப்பவும் அவரிடம் இருந்தது. அந்த தன்னம்பிக்கையோடவே கல்லூரி படிப்பை முடித்தார் வசந்தகுமார். பின் பிறந்த ஊரில் பெரிய வேலை வாய்ப்பு இல்லாத காரணத்தாலும் தன் அண்ணன் சென்னையில் இருப்பதாலும் வேலை தேடி சென்னை வந்து சேர்கிறார்.

களைப்பு இல்லாமல் பறக்கும் பறவை போல பறக்க ஆரம்பிக்கிறார். எப்போதும் போல சென்னை அவருக்கும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. இந்நிலையில் VGP குழுமத்தில் சேல்ஸ்மேன் வேலை கிடைக்கிறது. கிடைத்த பணியை செவ்வன செய்கிறார் வசந்தகுமார். கடின உழைப்பாளியான வசந்தகுமார் மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது VGP குழுமத்திற்கு, இதன் மூலம் வெகு சீக்கிரமாக சேல்ஸ் மேனேஜர் பதவி கொடுக்கப்படுகிறது.. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் முதல் இடியாக VGP குழுமத்திற்கும் இவருக்கும் சிறு மனகசப்பு ஏற்படுகிறது இதனால் செய்கிற வேலையை விட்டு வெளியே வருகிறார்.

அவரோட வாழ்கையின் மிக பெரிய திருப்புமுனை இது தான் வேலையை விட்டு வந்த பிறகு இனி வெளியில் வேலை செய்ய கூடாது சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு எடுக்கிறார் . கையில் பெரிய இருப்பு எதுவும் இல்லை, அவர் நண்பரின் பழைய கடை ஒன்று அசோக் நகரில்  இருப்பதை அறிந்து அந்த கடையை மிக குறைந்த வாடகையில் எடுக்கிறார். கடைக்கு வசந்த் & கோ என்று பெயர் பலகை மாட்டுகிறார். தவணை முறை திட்டத்தை அறிமுகப்படுத்துகிறார். அதன் பின் அவர் திரும்பி பார்க்கவே இல்லை தொட்டதெல்லாம் வெற்றி. தொழில் தொடங்க நினைப்பவர்களின் முன்மாதிரியாக  மாறுகிறார் வசந்த குமார்.. பாராளுமன்ற உறுப்பினர், சிறந்த தொழிலதிபர் என்று அவர் தொடாத உச்சங்கள் இல்லை.

மக்கள் என்னை நம்பி தான் என் கடையில் பொருள் வாங்கணும் என்று சொல்லி தன் நிறுவன விளம்பரத்தில் தானே நடித்தார். மிகபெரிய முட்டாள்தனமாக பார்க்கப்பட்ட அந்த உக்தி தான் அவருக்கு மிக பெரிய வெற்றிகளை பெற்று தந்தது. அந்த விளம்பரம் தான் கனவுகளாய் இருந்த சாமானியனின் வீட்டிற்கும் தொலைக்காட்சி , வாஷிங் மிசின், ஏ.சி என எல்லாவற்றையும் வர வைத்தது.

எங்க ஊர்ல பாட்டிங்க இப்படி சொல்லுவாங்க “ எதாவது வாங்கணும்னா Chair-ல உட்காந்து கருப்பா ஒரு புள்ள சிரிச்சிகிட்டு இருக்குமே அந்த புள்ள கிட்ட வாங்குபா”

அதனால தான் அவர் சாமானியர்களின் நாயகன்.

நன்றி திரு.வசந்தகுமார்

by ஜேஷ்..

Share this article on