கோவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மத்திய அரசு கடந்த ஜூலை மாதம் முதல் ஊரடங்கு தளர்வுகளை வெளியிட்டு வருகிறது அந்த வகையில் ஆகஸ்ட் 31 ஊரடங்கு முடியும் நிலையில் மத்திய அரசு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. அன்லாக் 4.0-வில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பற்றி பார்ப்போம்.

முக்கிய அம்சங்கள்:

செப்டம்பர் 30 வரை ஊரடங்கு தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் செப்டம்பர் 7 முதல் மெட்ரோ ரயில்களை இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

செப்டம்பர் 21 முதல் திறந்தவெளி திரையரங்குகள் இயங்கலாம் என்ற மத்திய அரசு தெரிவித்ததுள்ளது.

செப்டம்பர் 21 முதல் விளையாட்டு, அரசியல், மத கூட்டங்களில் 100பேர் வரை பங்கேற்க அனுமதி.

திரையரங்குகள், நீச்சல் குளங்கள் , கேளிக்க பூங்காக்கள் ஆகியவற்றிற்கு தொடர்ந்து தடை நீடிக்கிறது.

செப்டம்பர் 30 வரை பள்ளி கல்லூரிகள் திறக்க அனுமதி கிடையாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கல்வி நிலையங்களில் 50 சதவிகித ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தலாம்.

9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பெற்றோருக்கு விருப்பம் இருந்தால் பள்ளிக்கு செல்லலாம்.

கட்டுபடுத்தப்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 30 வரை கட்டுபாடுகள் தொடரும்.

மத்திய அரசின் அனுமதி இல்லாமல் மாநில அரசுகள் உள்ளூர் ஊரடங்கை பிறப்பிக்க கூடாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மாநில , மாவட்ட ,கோட்ட, நகர, கிராம அளவிலான ஊரடங்குகளை மாநில அரசுகள் பிறப்பிக்க கூடாது.

மாநிலத்திற்கு உள்ளே மக்கள் சென்று வருவதற்கு எந்த விதமான கட்டுபாடுகளும் விதிக்க கூடாது.

மாநிலங்களுக்குள் சென்று வர இ-பாஸ் உள்ளிட்ட எந்த நிபந்தனையும் விதிக்க கூடாது.

வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைக்கும் தொடர்ந்து தடை நீடிக்கும் என்று மத்திய அரசு அறிவிப்பு.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளுக்கு செல்லும் விமான சேவைகள் தொடரும்.

என்று மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது. எனினும் மாநில அரசுகள் மேலும் சில கட்டுபாடுகளுடன் தளர்வுகளை அறிவிக்கும் என்றே எதிர்பார்க்கபடுகிறது.

by ஜேஷ்..
Share this article on